Gulab Jamun Recipe in Tamil செய்வது எப்படி?
ரவையை பயன்படுத்தி மிருதுவான Juicy and Soft குலோப் ஜாமுன் Gulab Jamun செய்வது எப்படி? பொதுவாகக் கடைகளில் நாம் வாங்கி பயன்படுத்தும் Gulab Jamun குலோப்ஜாமுன் மிக்ஸர் மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.![]() |
Gulab Jamun Recipe |
தேவையான பொருள்கள் :
- சர்க்கரை- 3 கப்
- தண்ணீர்- 3 கப்
- ஏலக்காய்-சிறிதளவு
- குங்குமப்பூ -சிறிதளவு
- ரவை- ஒரு கப்
- பால்- 3 கப்
- எண்ணெய்-தேவையான அளவு
Step:1 (கம்பி பதம் - சக்கரை பாகு)
- முதலில் நாம் சக்கரை பாகு தயார் செய்ய வேண்டும். அதற்கு ஒரு. பாத்திரத்தில் 2 கப் அளவிற்கு சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் 3 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.அடுப்பு நன்கு எரிய வேண்டும்.இப்போது சர்க்கரை நன்கு கொதிக்க வேண்டும்.சர்க்கரை நன்கு கொதித்த பிறகு
- சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்க்கவும்
- பிறகு சிறிதளவு குங்குமப்பூ சேர்க்கவும்
இப்போது சர்க்கரைப்பாகு நல்ல கொதித்த பிறகு அதாவது ஒரு கம்பி பதம் வந்துவிடும்.
Step:2 (Gulab Jamun உருண்டை தயார் செய்தல்)
- ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு பாம்பே ரவை எடுத்துக் கொள்ளவும். பாம்பே ரவை என்றால் சின்னதாக இருக்கும்.
- மிதமான தீயில் ரவையை வறுக்க வேண்டும் இரண்டு நிமிடங்கள்வரை.
- இதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்க வேண்டும்.மூன்று நிமிடங்கள்வரை
- பிறகு 3 கப் பால் சேர்க்க வேண்டும்.
- அதனோடு 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
நாம் செய்யும் முறைப்படி செய்தால் ரவை நன்கு குழைய வெந்திருக்க வேண்டும்.அடுப்பை 4 நிமிடம் சிம்மில் வைத்து விட வேண்டும் அதாவது 4 நிமிடம் தம்மில் இருக்க வேண்டும்.
ரவை நன்கு குழைய வெந்து விட்டது.ரவை நன்கு மிருதுவாக இருக்கும். ரவை நன்கு ஆற வேண்டும். நன்கு ஆறியவுடன் நமது உள்ளங்கையை வைத்து ரவையை பிசைந்து விட வேண்டும். உங்கள் கையில் ஒட்டாமலிருக்க சிறிதளவு நெய்யோ எண்ணெயோ தடவிக் கொள்ளவும்.
ஒரு சிறிய Ball அளவிற்கு மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து விரிசல் வராத அளவிற்கு உருட்ட வேண்டும். இதே மாதிரி அனைத்து Ball தயார் செய்ய வேண்டும்.
Step:3 (Gulab Jamun பொரித்தால்)
- அனைத்து குலோப் ஜாமுன் உருண்டையையும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.பொரிப்பதற்கு முன்பு எண்ணெய் அதிக அளவு சூடாக இருக்கக் கூடாது. Gas Stove ஸ்டவ் மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். எண்ணெய் அதிக அளவு சூடாக இருந்தால் குலோப்ஜாமுன் வெளியே சிவந்துவிடும், உள்ளே வேகாமல் இருக்கும்.
- First Batch வேகவைப்பதற்கு 5 முதல் 7 நிமிடம் எடுத்துக்கொள்ளும். இப்போது குலோப் ஜாமுன் சுழற்றி விடவும். பார்ப்பதற்கு நல்ல நிறம் மாறி இருக்கும்.
- Light Golden Brown வண்ணத்தில் வந்தவுடன் நல்ல எண்ணையை வடிகட்டவும்.உடனடியாகச் சர்க்கரை பாகுவில் சேர்க்கவும் இவ்வாறு சேர்க்கும்பொழுது அதிகப்படியாகச் சர்க்கரைப்பாகு தேவைப்படாது.
Gulab Jamun Recipe
சர்க்கரைப்பாகு வில் குலோப்ஜாமை நன்கு ஊற விட வேண்டும். சரியாக ஐந்து முதல் எட்டு வரை நிமிடங்கள் ஊறினால் சுவையாக இருக்கும்.
சரியாக நாம் இரவில் செய்தால் காலையில் குலோப்ஜாமை தேவையான பாத்திரத்தில் வைத்து அதன்மீது சிறிதளவு மிஞ்சிய சர்க்கரை பாகுவை ஊற்றி வைக்கவும்.
குறிப்பு: சர்க்கரைப்பாகு மிதமான சூட்டில் இருக்க வேண்டும்
நாம் சொன்ன டிப்ஸ்களை நீங்கள் பின்பற்றினால் குலோப்ஜாமுன் மிகச் சுவையாக வரும். இதை ரவையில் தான் செய்தோம் என்று அனைவராலும் கண்டுபிடிக்கவே முடியாது அந்த அளவிற்கு சுவையும் கிடைக்கும்
நண்பர்களே நீங்களும் உங்களது வீட்டில் இந்தக் குலோப்ஜாம் செய்து பார்த்துவிட்டுக் கமெண்ட் பண்ணுங்கள்-Udhaya
Post a Comment