மேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - Mesham Guru Peyarchi Palangal 2023 - 2024

மேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - Mesham Guru Peyarchi Palangal 2023 - 2024

மேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 முதல் 2024 வரை


பொதுவான பலன்கள்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பலன் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். 2023 ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி முதல் 2024 மே 1 ஆம் தேதி வரை வரை நீடிக்கும் இந்த குருப் பெயர்ச்சி மேஷ ராசிக்கான குருப் பெயர்ச்சிக்கான பலனை இந்த கட்டுரையில் விரிவாகக் காணலாம். 

உங்களுக்கு ராசிக்கு குருவானது 9 மற்றும் 12 வீடுகளில் ஆட்சி செய்கிறார். அது நல்ல பலன்களை மட்டும் தான் தரும். சந்திரன் மற்றும் குருவின் சேர்க்கையானது உங்களது மனதைக் குழப்பி பின்பு தெளிவு படுத்தும்.

தொழில் மற்றும் வியாபாரம் பலன்கள்:

2023 மேஷ ராசிக்கு குருப் பெயர்ச்சி தொழில் மற்றும் வியாபாரத்தை பொருத்தமட்டிலும் பிரமாதமாக இருக்கும். தொழிலில் உங்களுடைய முயற்சிக்கு உண்டான பலனைத் தரும். சனி தொழில் மற்றும் தொழிலை ஆளும் கிரகம் என்பதால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெற இயலும். இந்த குருப் பெயர்ச்சி உங்கள் தொழிலுக்கு ஆதரவாக மட்டுமே இருக்கும்.
இருக்கும் தொழிலில் சிறிது மாற்றம் செய்தால் நல்ல முன்னேற்றங்களை அடையலாம். சிலருக்கு பணியிடங்களில் பதவி உயர்வு, வெளிநாடு சென்று தொழில் செய்யத் திட்டமிட்டோருக்கு நல்ல வாய்ப்பாக அமையும் இந்த காலம்,

காதல் மற்றும் குடும்ப உறவு:

குடும்ப உறவு சமூகமாக இருக்கும். ஐந்தாம் வீட்டில் சனி இருப்பதால் குழந்தைகள் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்பு தீர்க்கப்படும். குழந்தைகளின் மனநிலை புரிந்து கொள்ள முயற்சிக்கவும். மேஷ ராசிக்காரர்களுக்குத் தந்தையின் ஆதரவு பெருகும் மேலும் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை உணர முடியும். மேஷ ராசிக்காரர்களுக்குக் காதல் கைகூடும் வாய்ப்பு உள்ளது. ஆன்மீக விஷயத்தில் அதிகம் ஆர்வம் உண்டாகும்
அக்டோபர் 2023 இல் உங்களது திருமண உறவு வலுவடையும். அக்டோபர் வரை காதல் மற்றும் குடும்ப உறவில் மிகவும் இணக்கமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

நிதிநிலை:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி நிதிநிலை சாதகமாக இருக்கும் வியாபாரத்தை விரிவு படுத்த விரும்புபவர்கள் போதுமான அளவு நிதி இருக்கும் முதலீடுகள் லாபம் தரக்கூடும் கடன் வாங்கியவர்கள் அதனைத் திரும்பச் செலுத்தலாம் நிதி தடைகள் அனைத்தும் விலகி பணவரவு உங்களுக்குச் சீராக இருக்கும்.

கல்வி:

குழந்தைகள் கல்வியில் சிறப்பாகச் செயல்படலாம் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களது ஆராய்ச்சியில் வெற்றி பெறலாம் ஆனால் சில சவால்கள் இருக்கக்கூடும். மேஷ ராசிக்காரர்கள் கல்வியிலிருந்து வந்த தடைகள் அகலும். உங்கள் அறிவும் தன்னம்பிக்கை கூடும். உங்கள் விரும்பிய பல்கலைக்கழகத்தில் உங்களுக்கான படிப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டில் உயர் கல்வி படிக்க விரும்புவார்களுக்கு இந்த குரு பயிற்சி சாதகமாக்கிக் கொடுக்கும்.

உடல் நலம்:

உடலில் ஏற்பட்ட கோளாறுகள் கட்டுக்குள் வரலாம் நாள்பட்ட உடல் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும். உங்கள் உடல் தகுதியை அதிகரிக்கத் தியானம் மற்றும் யோகா போன்ற செயலில் ஈடுபடவும். போதுமான அளவு தண்ணீர் மற்றும் அதிக பழங்களைச் சாப்பிடவும் . உடம்பு சரியில்லை என்றால் சுய வைத்தியத்தைத் தவிர்த்து மருத்துவரை அணுகவும்.



பரிகாரம்:

வியாழக்கிழமை தோறும் நவக்கிரகத்தில் உள்ள குருவை வழிபடவும்.
பசுக்களுக்கு அகத்திக்கீரை தனமாகக் கொடுக்கவும்.
மாதம் ஒரு முறை அனாதை இல்லங்களுக்கு தங்களால் முடிந்த பொருளுதவி செய்யவும்.

Post a Comment