Vilakku poojai 108 potri in tamil வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி?

Admin
0

திருவிளக்கு பூஜை எப்போது  செய்ய வேண்டும் 


Vilakku poojai 108 potri in tamil
Vilakku poojai 108 potri in tamil

    பொதுவாகவே கார்த்திகை மாதத்தில் திருவிளக்கு பூஜை கோவில்களில் பெண்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து திருவிளக்கு பூஜை செய்வார்கள். சின்னக் குத்து விளக்கு வைத்து அல்லது அகல்விளக்கு வைத்து நிறைய கோயில்களில் அதுவும் அம்மன் கோயில்களில் பார்த்திருக்கிறோம். 

    இந்தக் கார்த்திகை மாதத்தில் முக்கியமாக வழிபாடு செய்வது நல்லது. ஆனால் நமது வீட்டில் திருவிளக்கு பூஜை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.ஆனால் கோவிலில் கார்த்திகை மாதத்தில் கட்டாயம் செய்வார்கள்.இந்தக் கார்த்திகை மாதத்தில் கொரோன  காரணத்தினால் திருவிளக்கு பூஜை, மற்ற பூஜைகளும் பொதுவாகக் கோயில்களில் திறக்க முடியவில்லை.கோயிலுக்குச் செல்ல முடியவில்லை என்று நிறைய பேர் வருத்தத்தில் உள்ளனர்

வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி?

    கோயிலுக்குச் செல்ல முடியவில்லை என்று அப்படியே விட்டுவிடாமல் அதற்குப் பதிலாக வீட்டிலேயே நாம் பூஜைகளைத் தொடரலாம்  குத்துவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமையில் செய்வது மிகச் சிறப்பு. சிலர் கார்த்திகை மாதத்தில் செய்வதுதான் சிறப்பு என்று கருதுகின்றனர் ஆனால் மார்கழி மாதத்தில் கூடச் செய்யலாம்.

வீட்டில் திருவிளக்கு பூஜை ஏன் செய்ய வேண்டும்!!

    திருவிளக்கு பூஜையின்போது 108 போற்றிகள் சொல்லி, லலிதா சஹஸ்ரநாமம், கனகதாராஸ்தோத்திரம்  ஏதேனும் அம்பாள் ஸ்தோத்திரங்கள் ஆக இருந்தாலும் பரவாயில்லை இந்தத் திருவிளக்கு பூஜை செய்யும்பொழுது குங்கும அர்ச்சனை செய்ய. அப்படி அர்ச்சனை செய்த குங்குமத்தை தினமும் பெண்கள் நெற்றியில் வைத்துக் கொண்டு வர வேண்டும். அதேசமயம் நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு இந்தக் குங்குமத்தை கொடுத்து வரலாம் இவ்வாறு செய்வதால் நம் கணவரின் ஆயுள் நீடித்திருக்கும் நாம் தீர்க்கச் சுமங்கலியாக இருக்கலாம். இதற்காகத்தான் திருவிளக்கு பூஜை நாம் செய்கிறோம்.

திருமணமாகாதவர்கள் குத்துவிளக்கு பூஜை செய்யலாமா?

    தாராளமாகச் செய்யலாம் பூஜை எல்லாம் செய்வதற்கு வயசு வித்தியாசம் கிடையாது ஆண் பெண் குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் செய்யலாம் 

    திருவிளக்கு பூஜை செய்வதற்கு எப்படி தயார் செய்வது மற்றும் பூஜைக்குத் தேவையான பொருள்கள்:

  • பூஜை செய்ய வேண்டிய இடத்தில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர்  எடுத்து அதில் ஒரு துணியை வைத்துப் பூஜை செய்யும் இடத்தைத் துடைத்துக் கொள்ளவும்.
  • பிறகு நமக்கு விருப்பமான ஒரு கோலம் போட்டுக் கொள்ளவும்.
  • குங்கும அர்ச்சனை செய்வதற்கு ஒரு கிண்ணத்தில் குங்குமம் எடுத்துக் கொள்ளவும்.
  • வெற்றிலை பாக்கு
  • வாழைப்பழம்
  • நெற்பொரி, பொட்டுக்கடலை மற்றும் வெல்லம்
  • பாலில் நாட்டுச் சர்க்கரை போட்டு வைக்கலாம்
  • சாம்புராணி
  • ஊதுபத்தி
  • மணமுள்ள மலர்
  • சின்ன விநாயகர் சிலை அல்லது படம்
  • குலதெய்வ படம் அல்லது செம்பில் தண்ணீர் வைத்து அதன் மீது ஏதேனும் பூக்கள் போடலாம்

திருவிளக்கு ஏற்றும் முறை 

    விளக்கு ஏற்றும்பொழுது ஒரு துணை விளக்கு மூலமாக ஏற்ற வேண்டும். நேரடியாகத் தீப்பெட்டி பயன்படுத்தக் கூடாது.குத்து விளக்கில் ஐந்து முகங்களும் ஏற்ற வேண்டும். குத்து விளக்கை ஏற்றுபவர்கள் அவர்களின் வேண்டுதலை மனதில் நினைத்துக்கொண்டு குத்து விளக்கு ஏற்ற வேண்டும். பூஜைக்குப் பயன்படுத்தும் மலர்கள் மணமுள்ள மலர் இருந்தால் மிகவும் நல்லது. இது போன்ற மணமுள்ள மலர்களை உதிரி மலர்கள் வைத்து 108 முறை போற்றி சொல்லி அர்ச்சனை செய்யலாம்.

திருவிளக்கு பூஜை ஏன் செய்ய வேண்டும் (Vilakku Pooja Benefits)

    இது குடும்ப ஒற்றுமைக்காக, நமது குழந்தைகளின் நலனுக்காக மற்றும் உலக நன்மைக்காகவும்.இந்த விளக்குப் பூஜை செய்வதால் நிறைய நன்மைகள் உண்டு. நாம் வேண்டுதல் வைத்தால் கட்டாயம் நிறைவேறும். இந்த விளக்கிலும் மற்றும்  கோமாதாவின் உடம்பிலும் சகல தேவாதி தேவர்களும்  இருப்பார்கள். அதேபோல விளக்குப் பூஜை செய்த விளக்கில் தான் மூன்று தெய்வங்களும் சிவன், மகாவிஷ்ணு மற்றும் பிரம்மா இருப்பார்கள் திருவிளக்கு பூஜை செய்யும்பொழுது இந்த மூன்று தேவர்களின் ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும்.

முழுமுதற் கடவுள் விநாயகர் அருளும் குலதெய்வத்தின் ஆசியும்

    விநாயகரின் அனுகிரகம் இருந்தால் மட்டுமே எந்தப் பூஜையும் முழுமையாகச் செய்ய முடியும். அடுத்ததாக நம்முடைய குலதெய்வத்தின் ஆசியும் அருளும் இருந்தால் தான் அந்தப் பூஜையைத் தொடர்ந்து செய்ய முடியும் உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.எந்த ஒரு பூஜை செய்வதற்கு முன்பும் பிள்ளையார் மந்திரம் சொல்ல வேண்டும். அப்படி தெரியவில்லை என்றால் நீங்கள் உங்களது மனதில் உண்மையாகப் பிள்ளையாரை வணங்கிக் கொள்ளலாம்.இப்போது ஒரு பூ எடுத்துப் பிள்ளையாருக்கு சாத்திவிட்டு அடுத்ததாக நம்மளுடைய குலதெய்வத்தை மனதில் நினைத்து வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும்.உங்கள் குல தெய்வத்திற்கும் ஒரு மலர் வைத்துக் கொள்ளுங்கள். என்ன வேண்டுதல் நினைக்கிறீர்களோ அதை வேண்டிக்கொள்ளுங்கள். அடுத்ததாக உங்களுடைய இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்.

Thiruvilakku Pooja Stotram:

    அடுத்ததாகத் திருவிளக்கு குங்கும அர்ச்சனைக்கு சொல்லவேண்டிய  மந்திரங்கள் நான் pdf கொடுத்துள்ளேன். அதைப் பார்த்து நீங்கள் 108 போற்றி குங்கும அர்ச்சனை செய்யவும்.

    108 போற்றி எல்லாம் சொல்லி முடித்தபிறகு நாம் நெய்வேத்திற்காக என்ன வைத்திருக்கிறோமா அதைச் சமர்ப்பிக்க வேண்டும்.நைவேத்தியம் செய்வதற்காக வைத்த தண்ணீரில் ஸ்பூன் மூலமாக எடுத்து மூன்று முறை பழங்கள் & நெய்வேத்தியம் பலகாரம் அவற்றைச் சுற்றி வர வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய் விளக்கு ஆரத்தி காண்பிக்க வேண்டும். ஆரத்தி காண்பிக்கும்பொழுது குழந்தைகள் அல்லது பெரியவர்கள் இருந்தால் மணி அடிக்கச் சொல்லுங்கள்.ஆரத்தி பாடல் தெரிந்தால் ஆரத்தி பாடல் பாடலாம் இல்லையென்றால் நீங்கள் உங்கள் மனதில் குலத்தெய்வத்தை நினைத்துக் கொண்டு ஆரத்தி காண்பிக்கலாம்

    அர்ச்சனை செய்த குங்குமத்தை  நீங்கள் பத்திரமாக ஒரு டப்பாவில் அடைத்து வைத்துத் தினமும் இட்டுக் கொள்ளவும். நல்ல பல மாற்றங்கள் ஏற்படும் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் அல்லது 11 வாரங்கள் இவ்வாறு செய்து வந்தோம் என்றால் ரொம்ப விசேஷமாக இருக்கும். நீங்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்று நலமோடு வாழ்வீர்கள்கடைசியாகப் பூஜை செய்த இந்தக் குங்குமத்தை நமது நெற்றி வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகள் கொடுக்க வேண்டும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !