இந்தத் திட்டத்தின் ஆயுள் காலம் இரண்டு வருடங்களும் இவற்றின் வட்டி விகிதம் 7.5% ஆகும்.ஒருவேளை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தங்களுடைய Guardian மூலமாக இணைந்து கொள்ளலாம்.
![]() |
"Unlock Financial Independence: Mahila Samman Savings Certificate 2023" |
உதாரணத்திற்கு நீங்கள் 2 லட்சம் இந்த திட்டத்தில் முதலீடு செய்தீர்கள் என்றால் இரண்டு வருடங்களுக்கு பிறகு 32 ஆயிரம் அதாவது மொத்தமாக 2 லட்சத்து 32 ஆயிரம் உங்களுக்கு கிடைக்கும்.
ஏதேனும் காரணங்களால் உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டால் அதாவது ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் முதலீடு செய்த பணத்தில் 40% partial Withdrawal செய்ய முடியும்.
நீங்கள் இரண்டு லட்சம் முதலீடு செய்தீர்கள் என்றால் 80 ஆயிரம் உங்களால் withdrawal செய்து கொள்ள முடியும். மீதமுள்ள தொகை அங்கே இருக்கும் அதன் வட்டி இரண்டு வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு கிடைக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் தொடங்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். ஆனால் மூன்று மாத இடைவெளி கழித்த பிறகு நீங்கள் உங்களுடைய கணக்கை தொடங்க முடியும்.
இந்த மாதம் 20 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கணக்கை தொடங்கினீர்கள் என்றால் அடுத்த மூன்று மாதம் கழித்து தான் அடுத்த கணக்கை தொடங்க இயலும் ஆக மொத்தம் இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே முதலீடு செய்ய இயலும்.
.
நீங்கள் ஒரு பெண் என்றால் உங்களுக்கு சேமிக்க வேண்டும் என்றால் இந்த சேமிப்பு முறையை பயன்படுத்திக் கொள்ளலாம் ஒருவேளை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தங்களுடைய Guardian மூலமாக இணைந்து கொள்ளலாம்.
அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ் அலுவலகத்தில் உங்களுடைய பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு கொடுத்து புதிய கணக்கை தொடங்கி கொள்ளலாம்
Post a Comment